காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் சுசீந்திரன்.
திருப்பூர்,காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் 2025 ம் வருட ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விலா நடைபெற்றது. கல்லூரியின் கலாம் அரங்கத்தில் நடைபெற்ற
இவ்விழாவுக்கு ஆண்டவர் தொழில் குழுமத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி ஆர். பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்.
அப்போது அவர் தொழில் முனைவோர்களின் எதிர்காலம், தலைமைத்துவம் மற்றும் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் குறித்து உற்சாகமாக உரையாற்றினார்.புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரும், திரைக்கதை ஆசிரியருமான சுசீந்திரன் (வெண்ணிலா கபடி குழு ), கலந்து கொண்டு தனது திரைப்பட பயண அனுபவங்களை பகிர்ந்து, மாணவர்களுக்கு தங்கள் கனவுகளை நேசித்து கடின உழைப்பின் மூலம் சாதிக்க ஊக்கமளித்தார்.
அதை தொடர்ந்து வருமானவரி அதிகாரியும்,ஈரோடு மாவட்ட அமேச்சூர் கபடி சங்கத்தின் தலைவருமான பி. ராஜ்குமார் மாணவர்களின் வாழ்க்கையில் விளையாட்டு மற்றும் ஒழுங்கின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.முன்னதாக கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ். ராம்குமார், கல்வி ஆண்டு அறிக்கையுடன் வரவேற்புரையை வழங்கி, கல்லூரியின் கடந்தாண்டு சாதனைகள் மற்றும் முன்னேற்றங்களை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து காங்கேயம் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஆர். வி. மகேந்திர கவுடா, சிறப்புரையாற்றி, கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் மாணவர்களை உருவாக்குவதே காங்கேயம் தொழில்நுட்பக் கல்லூரியின் நோக்கம் என்பதை வலியுறுத்தினார்.
பின்னர் கல்லூரி தலைவர் என். இராமலிங்கம்,செயலாளர் சி. கே. வெங்கடாசலம், தாளாளர் எஸ். ஆனந்தவடிவேல்,பொருளாளர் சி. கே. பாலசுப்ரமணியம் ஆகியோர் கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர்.
அதனையடுத்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
முடிவில் இயந்திரவியல் துறைத் தலைவர் டாக்டர் பி. சோமசுந்தரம் நன்றியுரை வழங்கினார்.