தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் இரண்டு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தினர் தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி. தாராபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பங்கேற்பு
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தாராபுரம் வட்டார இரண்டு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கம் சார்பில் மே தின விழாவை முன்னிட்டு தலைக்கவச விழிப்புணர்வு வாகன பேரணி நடைபெற்றது. பேரணிக்கு தாராபுரம் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தலைமை தாங்கினார்.
காவல் ஆய்வாளர் விஜய சாரதி, வழக்கறிஞர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தாராபுரம் அமராவதி சிலை ரவுண்டானாவில் தொடங்கிய பேரணியை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.சஜினி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்கத் தலைவர் ஸ்ரீஜீ வரவேற்றார்.
பேரணி அமராவதி சிலை ரவுண்டானாவில் தொடங்கி, பூக்கடை மூக்கு சந்திப்பு ,அண்ணா சிலை, அலோசியஸ் சர்ச் சாலை, அலங்கியம் ரோடு, உடுமலை ரோடு சிக்னல், பஸ் நிலையம் வழியாக மீண்டும் அமராவதி சிலை ரவுண்டானாவை வந்தடைந்தது. பேரணியின் இடையில் தாராபுரம்- அலங்கியம் ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற 2 நிமிடம் பிரார்த்தனை செய்யப்பட்டது. தொடர்ந்து போக்குவரத்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜினி ஓட்டுனர் உரிமம், வாகன காப்பீடு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும், தலைக்கவசம், சாலை விதிகள், வேகக் கட்டுப்பாடு ஆகியவற்றின் அவசியம் குறித்தும் பேசினார்.
இதில் தாராபுரம் வட்டார இரண்டு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க துணை தலைவர் அபிபுல்லா, செயலாளர் குமார் மற்றும் போக்குவரத்து போலீசார் உட்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.