அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் கொண்டயம்பட்டி அருகே உள்ள வகுத்து மலை அடிவாரத்தில் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது.அங்குள்ள சுப்பிரமணியசுவாமி உள்ளிட்ட தில்லைகாளியம்மன் ஆலயத்தில் அமுது படையல் விழா நடைபெற்றது .இந்த நிகழ்ச்யில் கடந்த மூன்று நாட்கள் நடந்தது.
இதில் பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து வந்தனர். தொடர்ந்து 108 விளக்கு பூஜையும் நடந்தது.இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தில்லை காளி அம்மனுக்கு 36 வகையான ஆடை அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவு படைத்து விசேஷ பூஜை நடைபெற்றது.
இந்த விழாவில் திருமணமாகாத கன்னிப் பெண்கள் மற்றும் குழந்தை வரம் வேண்டியும் இங்கு சிறப்பு பரிகார பூஜைகள் நடைபெற்றது. விழாவில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு தில்லை காளி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் .இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் பக்தர்கள் குழு மற்றும் ஹரிபகவான் ஆகியோர் செய்திருந்தனர்.