தூத்துக்குடி மாநகராட்சியில் பணிகள் முடிந்து திறப்பு விழா நடத்தப்பட்ட பல்வேறு பணிகளுக்கு முறைகேடாக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதால் அதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தடையானை விதித்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்…
நமக்கு நாமே திட்டத்தில் கடந்த ஆறாம் தேதி 23ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் அன்று மாலை 3 மணிக்குள் ஒப்பந்தம் திறக்கப்படும் என்று உள்ளனர்.
கிழக்கு மண்டலத்தில் உள்ள ஆயிரம் பிறை பூங்கா அமைத்தல் மாநகராட்சி பின்புறம் மீனாட்சிபுரம் பகுதிகள் தார் சாலை அமைத்தல் ஆகிய பணிகள் முடிவடைந்து பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி அதனை திறந்து வைத்துள்ளனர்.
திறந்து வைத்ததை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன்
தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் பிப்ரவரி மாதம் வேலை முடிந்து திறக்கப்பட்ட திட்டத்திற்கு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி ஒப்பந்தம் கோருகிறார்கள். தூத்துக்குடி மாநகராட்சியில் டெண்டர் அனைத்துமே முறைப்படி நடைப்பதில்லை, மேயர் மற்றும் அமைச்சருக்கு வேண்டிய நபர்களுக்கு கொடுக்கிறார்கள்.
மக்கள் வரிப்பணத்தை முறையாக செலவு செய்வதற்காகத்தான் டெண்டர் கோரப்படுகிறது. ஒவ்வொரு பணியையும் மூன்று கட்டமாக ஆய்வு செய்வார்கள் ஆனால் இப்படி முறைகேடு நடக்கிறது.
இது குறித்து பாஜக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விசாரிக்க கோரி மன அளித்துள்ளோம் அது குறித்து அனைத்து பத்திரிகைகளிளும் செய்தியை வெளியானது இருந்த போதும் ஆளுங்கட்சி சார்பாக சர்வாதிக முறையில் ஒப்பந்தம் கோருகிறார்கள்.
மக்கள் மீது ஒரு அலட்சிய தன்மையோடு செயல்பட்ட காரணமாக மதுரை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுத்தோம். இதில் மாநகராட்சிக்கு தடை விதித்துள்ளது. இரண்டு வாரத்தில் மாநகராட்சி பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நிதியில் நடைபெறக்கூடிய பணிகளுக்கு ஜியோ டேக் என்று சேட்டிலைட் உதவியோடு ஆய்வு செய்யப்படுகிறது.
அதேபோன்று தமிழக அரசு நடத்தும் பணிகளை திட்டம் செயலி மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.
பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எந்த ஒரு டெண்டர் ஓபன் பண்ணாத திட்டத்தை ஓபன் செய்துள்ளார் என்றால் அவர் எந்த அளவு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
தூத்துக்குடி மாநகரில் பல அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் திணறி வருகின்ற நிலையில் மாநகராட்சி அலுவலகத்தை 8 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புனரமைத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் தான்தோன்றித்தனமாக ஊழலில் ஈடுபட்டு வருகிறது என்று குற்றம் சாட்டிய அவர் பொதுமக்களின் கவனத்தை ஏற்கும் வகையில் ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்த முயன்றால் அதற்கு காவல்துறையினர் அனுமதி கொடுப்பதில்லை என்று அவர் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
இதுகுறித்து அமலாக்கத்துறை ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு முதலமைச்சரின் தனி பிரிவுகளுக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
பேட்டியின் போது பாஜக மாவட்ட துணை தலைவர் சிவராமன், மண்டல தலைவர் ராஜேஷ் கனி ஆகியோர் உடன் இருந்தனர்.