உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொடைக்கானலில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சுற்றுச்சூழல் தலைவரும்,முன்னாள் 324 மாவட்ட ஆளுநருமான டாக்டர் டி.பி.ரவீந்திரன் ஆனந்தகிரி பகுதியில் பழ மரக்கன்று நடவு செய்தார்அதன் பின்னர் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் ஒழிப்பு,பசுமை காத்தல் குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் அங்குள்ள மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சிகிச்சை பெற வந்தவர்கள் என அனைவர் முன்னிலையிலும் விரிவாக.எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள்,பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்,பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்பது எவ்வாறு பிளாஸ்டிக் பயன்படுத்தி தரை பகுதியில் வீசுவதால் பூமி மாசடைந்து நீர் ஆதாரம் குறைவதாகவும் நீர்க்குமிழிகள் பிளாஸ்டிக் கழிவுகள் அடைப்பதாகவும் அதன் காரணமாக பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தவிர்க்க வேண்டும் எனவே மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரித்து பிளாஸ்டிக் பைகளை தவிர்க்க வேண்டும் என கொடைக்கானல் நகராட்சி மஞ்சப்பை பயன்பாட்டு விழிப்புணர்வு ஊழியர்கள் சுமதி மற்றும் ஜெபா ஆகியோர் அங்கு சிகிச்சை பெற வந்து அவர்களிடம் எடுத்துரைத்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கொடைக்கானல் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பொன் ரதி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அனைவரும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் எனவும் வீட்டுக்கு ஒரு மரம் அல்ல பல மரங்களை வளர்த்து பசுமையை முன்னெடுக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சுற்றுச்சூழல் தலைவர் டாக்டர் டி பி ரவீந்திரன் கூறுகையில் தமிழக முழுவதும் பல லட்சம் மரங்களை நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு குடிமகனும் தங்களது வீடுகளில் ஒரு மரக்கன்றல்ல பல மரக்கன்றுகளை நடவு செய்து நாட்டில் பசுமையை உருவாக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் ஆக்சிஜன் இல்லாத நிலை உருவானால் அனைவரும் முதுகில் சிலிண்டரை கட்டிக்கொண்டு சுற்ற வேண்டிய சூழல் உருவாகும் எனவே பசுமை வளர்ச்சியை அனைத்து தரப்பினரும் முன்னெடுக்க வேண்டும் என விளக்கமாக உரையாற்றினார்.
முன்னதாக கொடைக்கானல் அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர்கள் மகேந்திரன் மற்றும் ராமராஜ் ஆகியோர் பசுமையின் அவசியம் மரம் வளர்ப்பதின் அவசியம் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்துவதன் நன்மை குறித்து எடுத்துரைத்தனர்.இந்நிகழ்வில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி சுற்றுச்சூழல் தலைவர் டாக்டர் டி.பி. ரவீந்திரன்,கொடைக்கானல் சன் லயன்ஸ் சங்க தலைவர் செந்தில்குமார்,செயலாளர் சுரேஷ் பால்ராஜ்,பொருளாளர் ஆஷாரவீந்திரன் ஆகியோர் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் புதிதாக ஒரு பசுமை பூங்கா அமைத்து தர இசைந்து அதற்கான பணிகளை விரைவில் துவக்க உள்ளதாகவும்,மேலும் பல மரக்கன்றுகளை அரசு மருத்துவமனையில் நடவு உள்ளதாகவும் இதற்கு அனைத்து தரப்பினரும் உதவ முன் வர வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.