திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டையில் சின்னகருப்பு, பெரியகருப்பு சாமிகளின் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.
இதையொட்டி சாமி சிலைகள் செய்யபட்டு கோவில் மந்தையில் வைத்து கண் திறக்கப்பட்டு அதிர்வேட்டுகள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை நடைப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து அரண்மனை குதிரைகள் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.