காஞ்சிபுரம் தனிஷ்க் நகைக் கடையில் தங்க பரிமாற்றம் புதிய திட்டம் தங்கத்திற்கு கூடுதலாக 1 காரட்டும், வைரத்திற்கு கூடுதலாக 2 காரட்டும் வழங்கும் அறிமுக விழா நடைபெற்றது.

வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் முன்னிலையில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்து ஜூவல்லரி நிர்வாகத்தினர் கூறுகையில், ‘வாடிக்கையாளர்கள் தங்களின் பழைய தங்கத்தை மாற்றிக் கொள்ள தனிஷ்க்கை ஆர்வத்துடன் விரும்பி தேர்வு செய்கின்றனர்.

தங்கம் விலை அதிகரிக்கும் வேளையில் தனிஷ்க் மாறி வரும் தங்க விலைகளுக்கு மத்தியில், வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, ‘கோல்ட் எக்சேஞ்ச் பாலிசி’ வழங்குகிறது.

வாடிக்கையாளர்களுக்கு கழிவே இல்லாமல் பழைய தங்கத்திற்கு பதிலாக புதிய வடிவமைப்பு கொண்ட புதிய தங்க ஆபரணங்களாக தரம் உயர்த்தி கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இன்றைய நவீன மற்றும் அந்தந்த பிராந்திய வடிவமைப்புகளிலான ஏராளமான நகைகளை வழங்குகிறது.

தங்க பரிமாற்றம் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பழைய தங்க நகையை கொடுத்து விட்டு புதிய தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த தங்கத்தின் மதிப்பில் இருந்து 1 காரட் கூடுதலாகவும் வைரத்தின் 2 காரட் கூடுதலாகவும் சலுகை வழங்கும் திட்டம் என்று தமிழக முழுவதும் உள்ள தனிஷ்க் நிறுவனத்தில் இன்று முதல் வழங்கப்படுகிறது, இந்த வாய்ப்பை பயன்படுத்தி பழைய தங்க நகையை கொடுத்து புதிய தங்க நகை வாங்க வாடிக்கையாளர்கள் வருகை தந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் தனிஷ்க் ஜூவல்லரியின் பகுதி வணிக மேலாளர் இக்னெசிஸ், காஞ்சிபுரம் தனிஷுவலரியின், வணிக பங்குதாரர், சித்ரா, அரசு மற்றும் ரூப் ஆனந்த் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *