மரக்குளம் கிராமத்தில் ஸ்ரீ கருமேனி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் விழாவில் முளைப்பாரி ஊர்வலம்
ராமநாதபுரம் மாவட்டம்,
கமுதி அருகேயுள்ள மரக்குளம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ஆதி விநாயகர், ஸ்ரீ வழிவிடு விநாயகர், ஸ்ரீ வில்லாலுடைய அய்யனார் ஸ்ரீ கருமேனி அம்மன், ஸ்ரீகாளியம்மன், ஸ்ரீ முப்பிடாரி அம்மன், ஸ்ரீ ஊர் காவலன் கோவில் கடந்த 30-ந் தேதி வெள்ளிக்கிழமை காப்புக் கட்டுடன் துவங்கியது.
பின்னர் 4-ம் தேதி புதன்கிழமை ஸ்ரீ காளியம்மன் கோவில் முன்பு ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பின்னர் வெள்ளிக்கிழமை கிராமத்தின் ஸ்ரீ வழிவிடு விநாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் மேளதாளம், ஜிப்லா மேளம்
மற்றும் வானவேடிக்கையுடன் ஏராளமான பெண்கள் தலையில் பால்குடத்துடன் ஊர்வலமாக கண்மாயில் பகுதியில் உள்ள ஸ்ரீ வில்லாலுடைய அய்யனார் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.
திருவிழாவின் முக்கிய நாளான நேற்று கிராமத்தின் வீதிகள் வழியாக முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக முளைப்பாரியை கீழே வைத்து ஏராளமான பெண்கள் சுற்றி வந்து பக்தி பாடல் பாடி கும்மியடித்தனர். பின்னர் வானவேடிக்கை, மேளதாளம் முழங்க 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரியை சுமந்து ஊர்வலமாக கருமேனி அம்மன் கோவிலுக்கு எடுத்து சென்று வழிபட்டு, பின்னர் ஆற்றில் கரைத்தனர்.
இந்த முளைப்பாரி ஊர்வலத்தில் கிராம பொது மக்கள் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்