போடிநாயக்கனூர் ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் யோகா தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கல்வி நிறுவனமான ஏல விவசாயிகள் சங்க கல்லூரியின் கார்டமம் பிளாஸ்டர்ஸ் அசோசியேசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு கல்லூரியில் தேசிய மாணவர் படை சார்பில் மரக்கன்றுகள் நடுதல் விழா கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ் .சிவக்குமார் தலைமையிலும் கல்லூரி கண்காணிப்பாளர் S.G. ராஜசேகரன் முன்னிலையிலும் பசுமையை போற்றும் விதமாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி லெப்டினைட் முனைவர் எஸ் நாகலிங்கம் வெகு சிறப்பாக செய்திருந்தார்.