வலங்கைமான் அருகே உள்ள ஆண்டாங்கோயில் வடக்கு தெருவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் அபிஷேக ஆராதனை மற்றும் சந்தனக்காப்பு அலங்காரம், கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள மேலவிடையல் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டாங்கோயில் கிராமத்தில் வடக்கு தெருவில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வருடந்தோறும் வைகாசி மாதத்தில் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் நேற்று ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், கஞ்சி வார்த்தலும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
விழாவை அப்பகுதி கிராம பொதுமக்கள் இணைந்து சிறப்பாக செய்து இருந்தனர்.