திருப்பூர் மாவட்டம் செய்தியாளர் பிரபு
செல் :9715328420
தாராபுரம் அடுத்த சின்னக்கம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கோழி பண்ணையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னக்கம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான முட்டை கோழி பண்ணை செயல்பட்டு வருகிறது இந்த கோழிப்பண்ணையில் இருந்து வெளியேறும் கணக்கான ஈக்களால் பல்வேறு தொந்தரவுகளை விவசாயிகள் சந்திப்பதாக தெரிவித்துள்ளனர்.
கோழி பண்ணையை உடனடியாக மூட வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
கோழிப்பண்ணையில் சுகாதார சீர்கேடு காரணமாக பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்கள் மற்றும் கோழி கழிவுகளால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பாக நான்கு பசு மாடுகள் இதுவரை இறந்துள்ளது, குழந்தைகளுக்கும் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக தனியாருக்கு சொந்தமான கோழி பண்ணையை மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்திற்குள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.