திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ தையல் நாயகி சமேத ஶ்ரீ வைத்தீஸ்வர் ஆலயத்தில் வரும் ஜூலை மாதம் 02- ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு அதிகாலை ஹோமம் நடைபெற்று ஆலயத்தின் அறங்காவலர் சென்னை மீனாராம் டிரஸ்ட் ஆர். சிவராமகிருஷ்ணன், முன்னாள் அறங்காவலர் சா.குணசேகரன், வலங்கைமான் பேரூர் திமுக செயலாளர் பா. சிவநேசன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மாஸ்டர் எஸ்.ஜெயபால், ஆர்.ஜி.பாலா, அம்மன் எடை மிஷின் ஜி.பாலகிருஷ்ணன், எஸ்.மூர்த்தி மற்றும் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ ஏ.குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பந்தக்கால் முகூர்த்தம் செய்து நட்டனர்.