தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு மனிதநேயமிக்க சேவைகளை அடித்தட்டு மக்களுக்கு சேவை மனப்பான்மையுடன் மை தருமபுரி அமைப்பினர் செய்து வருகின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள மலை கிராம பகுதியில் உள்ள பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்திட , கல்வி உபகரணங்கள் வழங்கி வருகின்றனர்அரூர் பகுதிகளில் கல்வி வட்டத்தில் உள்ள சித்தேரி ஊராட்சி அரசநத்தம் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளி மற்றும் கலசப்பாடி உண்டி உறைவிட உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் என 248 மாணவர்களுக்கு மேலங்கி வழங்கினர்.

அரசநத்தம் பள்ளி தலைமையாசிரியர் வனிதா, ஆசிரியர் சுதா, சதீஸ், கலசப்பாடி பள்ளி தலைமையாசிரியர் குமார் ஆகியோர் மாணவர்களுக்கு மேலங்கி வழங்க உதவினர்.

மை தருமபுரி அமைப்பினருடன் இணைந்து ஆசிரியர் தமிழரசன் அவர்கள் உதவி செய்தார். எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர் கிருஷ்ணன், தன்னார்வலர் கோகுல்ராஜ் ஆகியோர் மாணவர்களுக்கான மேலங்கியை வழங்கினர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *