விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பொம்மையார்பாளையம் திருமடத்தில் வைகாசி விசாகத் திருநாளில் ஸ்ரீ மயிலாசல அனுபூதி எனும் நூலினை மயிலம் பொம்மபுற ஆதீனம் 20ஆம் பட்டம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் வெளியிட புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து, இந்து தமிழ் திசை நாளிதழ் புதுச்சேரி மேலாளர் பி. கவுசிக், புதுவைத் தமிழ்ச் சங்கச் செயலர் ஆசிரியர் செம்மல் சீனு.மோகன் தாசு ஆகியோர் பெற்றுக்கொண்டனர். உடன் மயிலம் தமிழ் கல்லூரி முதல்வர் முனைவர் ச.திருநாவுக்கரசு, பேராசிரியர் அ.சதீஷ், பேராசிரியை வள்ளி ஆகியோர் உள்ளனர்.