தாராபுரம் செய்தியாளர்
பிரபு செல்:9715328420
தாராபுரத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதி மொழி இயக்கத்தை அமைச்சர் கயல்விழி தொடக்கி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:
குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய வயதில் தொழிலாளர்களாக மாறும் நிலையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த தினத்தையொட்டி, குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க உறுதி மொழி ஏற்றுக்கொண்டு கையெழுத்து இயக்கம் மாநில அளவில் தொடங்கப்பட்டுள்ளது. இத்தினை தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூன் 12) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, குழந்தை தொழிலாளர்முறயை எதிர்த்து உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டனர். மாணவர்களின் உரைகள், கலை நிகழ்ச்சிகள் மூலம் குழந்தைகளின் உரிமைகளைப் பேண வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இந்த இயக்கத்தின் மூலம், “ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு செல்ல வேண்டும் – தொழிலுக்கு அல்ல” என்ற தொனிப்பொருளுடன் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை அரசு இலக்காகக் கொண்டுள்ளது.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் இதேபோன்று உறுதி மொழி இயக்கம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தாராபுரம் கோட்டாட்சியர் ஃபிலிக்ஸ் ராஜா, முன்னிலை வகித்தார். தாராபுரம் திமுக நகர செயலாளர் முருகானந்தம். மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.