எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை அமைச்சர்கள் கோவி .செழியன் , மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எடக்குடி வடபாதி, சட்டநாதபுரம், அகணி, கொண்டத்தூர், பாகசாலை ஆகிய வருவாய் கிராமங்களில் ஊரக பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை உயர்கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்து, பார்வையிட்டு, 126 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் , சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம்.முருகன் , எம்.பன்னீர்செல்வம் , சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இரண்டு பயனாளிகளுக்கு இயற்கை மரண உதவித்தொகை, வருவாய் துறை சார்பில் 19 பயனாளிகளுக்கு முதல் பட்டதாரி சான்று , 25 பைனாளிகளுக்கு இருப்பிட சான்று 15 16 களுக்கு வருமான சான்றுகளையும் வேளாண்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருளையும், ஒரு பயனாளிக்கு ரூபாய் 50000 மதிப்புள்ள கறவை மாடு வாங்குவதற்கான கடன் உதவியும், 6 விவசாயிகளுக்கு குழு தலைவருக்கு தல ஒரு லட்சம் 60 ஆயிரம் மதிப்பில் எண்ணெய் பிழியும் இயந்திரம், தோட்டக்கலைத்துறை சார்பில் மூன்று பயனாளிகளுக்கு பழக்கன்றுகளையும் 35 பாராளுகளுக்கு முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் அட்டையையும் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், பிரபாகரன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.