கோவையில் ஜூன் 16-ஆம் தேதி அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு நடைபெறுகிறது..

ஜூன் 14-ஆம் தேதி வரும் நீட் தேர்வு முடிவையொட்டி, அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு, ஜூன் 16-ஆம் தேதி கோவை தி கிராண்ட் ரீஜெண்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் (National Medical Commission) மாறிவரும் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ரஷ்யப் பல்கலைக்கழகங்கள் ஏற்கெனவே கடைப்பிடித்து வருவதால், வெளிநாடுகளில் மருத்துவக் கல்வியை நாடும் இந்திய மாணவர்களுக்கு ரஷ்யாவே முதன்மையான தேர்வாக இருக்கிறது.

ஜூன் 16 அன்று கோவையில் நடைபெறும் கண்காட்சியில். எம்.பி.பி.எஸ். மட்டுமல்லாது பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் இளநிலை பட்டங்களுக்கும் ஸ்பாட் அட்மிஷன் நடைபெறவுள்ளது. சேலத்தில் ஜூன் 17, திருச்சியில் ஜூன் 18, மதுரையில் ஜூன் 19, சென்னையில் ஜூன் 21 & 22 ஆகிய தேதிகளில் ரஷ்யக் கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இக்கல்விக் கண்காட்சியில் ரஷ்யாவின் முக்கிய பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றன.

தேசிய தகுதி நுழைவுத் தேர்வில் (NEET) தேர்ச்சி பெற்ற, 12-ஆம் வகுப்பில் முக்கிய பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள் பெற்ற இந்திய மாணவர்கள் (எஸ்.சி./எஸ்.டி. மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச மதிப்பெண்கள் 40% மட்டுமே), ரஷ்யா மருத்துவத்தில் இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழ் வழியில் படித்த மாணவர்களும் எம்.பி.பி.எஸ். /பி.இ. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி. (CET), ஐ.இ.எல்.டி.எஸ். (IELTS) போன்ற முன் தகுதித் தேர்வுகள் தேவை இல்லை.

கடந்த ஆண்டில் ரஷ்யாவில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 200% அதிகரித்துள்ளது. எம்.பி.பி.எஸ். படிப்பதற்கான கல்விக் கட்டணம், ஆண்டொன்றுக்கு மிகக் குறைவாக ரூ. 3 லட்சத்திலிருந்து தொடங்குகிறது. 200 இந்திய மாணவர்களுக்கு 100% கல்வி உதவித் தொகையுடன் மருத்துவம் படிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *