புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார் பிறந்தநாளை முன்னிட்டு தொகுதி முழுவதும் பாஜக தொகுதி தலைவர் விஜயராஜ் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தண்ணீர் பாட்டலுடன் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது
பிரபல தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் காமராஜர் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் ஆகியோரின் வழிகாட்டுதல்படி, புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார் பிறந்தநாள் விழா பாஜக தொகுதி தலைவர் விஜயராஜ் தலைமையில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி நெல்லித்தோப்பு தொகுதிக்கு உட்பட்ட சாரம்,தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ஏ.எப்.டி பஞ்சாலை, நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், மற்றும் முதலியார் பேட்டை ஜான் குமார் அறக்கட்டளை அலுவலகத்தில், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பாட்டிலுடன் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் இளைஞரணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.