புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்டநீதிபதியுமான அம்பிகா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல் தலைவரும், உச்ச
நீதிமன்றத்தின் நீதியரசருமான சூரியகாந்த் உத்தரவுப்படியும், புதுச்சேரி மாநில சட்டப்பணிகள் ஆணையத்தின் செயல்தலைவரும், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசருமான சுந்தர் வழிகாட்டுதலின் படியும், இன்று தேசிய
மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
அதே போன்று காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகத்திலும், மாஹே மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகத்திலும் நடைபெற்றது நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் வழக்குகளும், நேரடி வழக்குகளும் எடுத்துக் கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 13 அமர்வுகளும், புதுச்சேரி
சட்டப்பணிகள் ஆணையத்தில் 1 அமர்வும் நடைபெற்றது. இதனை
தலைமை நீதிபதி ஆனந்த் மற்றும் உறுப்பினர் செயலர் அம்பிகா ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
மேலும் காரைக்காலில் 5 அமர்வுகளும், மாஹேவில் 2 அமர்வுகளும், ஏனாமில் 1 அமர்வும், ஆக 22 அமர்வுகள் செயல்பட்டது இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நேரடி வழக்குகள் சுமார், 6209 எடுத்துக் கொள்ளப்பட்டு 1,457 வழக்குகள் முடிக்கப்பட்டு 14,54,87,707/- ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
இவற்றில் நீதிமன்ற நிலுவையில் இருந்த 1,368 வழக்குகள் முடிக்கப்பட்டது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.