துறையூர் மேற்கு ஒன்றியம் கண்ணனூரில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்-எம்எல்ஏ ஸ்டாலின்குமார் தொடங்கி வைத்தார்
துறையூர்
திருச்சி மாவட்டம்,துறையூர் வட்டம்,கண்ணனூரில் 14/06/2025 அன்று தமிழக அரசின் “நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை”சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், கலை இலக்கிய பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதி கண்ணனூர் குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ரவிச்சந்திரன்,மாவட்ட பிரதிநிதி நடுவலூர் செல்வகுமார், இலக்கியப் பகுத்தறிவு அணி மாவட்ட அமைப்பாளர் லெனின், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கலைச்செல்வன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்