தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
பா.ம.க பல்லடம், தாராபுரம் தொகுதிகளுக்கு திருப்பூர் கிழக்கு புதிய மாவட்ட செயலாளர் நியமனம் –அ. ரவிச்சந்திரன் பொறுப்பேற்பு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) புதிய மாவட்டச் செயலாளராக அ. ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
புதிய பொறுப்பேற்பு விழா:
புதிதாக நியமிக்கப்பட்ட அ.ரவிச்சந்திரன் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கட்சி அலுவலகத்தில் பா.ம.க நிர்வாகிகளின் முன்னிலையில், கூட்டம் ஒன்றில் தனது மாவட்டச் செயலாளர் பதவியை அதிகாரப்பூர்வமாக ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாவட்ட நிர்வாகிகள், கிளைத் தலைவர்கள், இளைஞரணி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது புதியதாக மாவட்டச் செயலாளர் பொறுப்பேற்றிருக்கும் ரவிச்சந்திரன் அவர்களுக்கு முக்கிய நிர்வாகிகள் சால்வை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் பொதுமக்களிடையே பா.ம.க.வின் வளர்ச்சி, சேவை முயற்சிகள், புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து பேசப்பட்டன.
புதிய பொறுப்பேற்பாளராக ரவிச்சந்திரன் தனது உரையில்,”பா.ம.க.வின் கொள்கைகளையும், அன்புமணி அவர்களின் இலட்சியங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல பணியாற்றுவேன். பல்லடம், தாராபுரம் தொகுதிகளில் பா.ம.க.வை வலுப்படுத்த நேரடியாக செயல்படுவேன்” என உறுதியளித்தார்.
பேட்டி:திரு,அ. ரவிச்சந்திரன்.
திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர்.