செய்தியாளர் வெங்கடேசன்.
தமிழ்நாடு முதல்வர் உத்தரவு படிபஞ்சமி தினத்தன்று அன்னதானம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் ஆர்காந்தி தொடங்கி வைப்பு :-
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பஞ்சமி தினத்தன்று கோயில்களில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை மாவட்டந்தோறும் மாவட்ட செயலாளருக்கு உத்தரவிட்ட நிலையில் அன்னதான நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்து பள்ளூர் கிராமத்தில் எழுந்தருலியுள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி உடனுறை திருக்குகேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் உடன் இணைந்து அருள்மிகு ஸ்ரீ வராகி அம்மன் திருக்கோவில் பஞ்சமி தினத்தை முன்னிட்டு முதல்வர் உத்தரவுப்படி ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கைத்தறி (ம) துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி சாமி தரிசனம் செய்த தார்.
பின்னர் 250 க்கும்மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வின் போது நெமிலி கிழக்கு ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு வடக்கு ஒன்றிய செயலாளர் மணிவண்ணன் இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அனிதா உதவி ஆணையர் சங்கர் ஆய்வாளர் அமுதா செயல் அலுவலர் பிரகாஷ் அறங்காவலர் குழு தலைவர் திருநாவுக்கரசு மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பூர்ணிமா துணைச் செயலாளர் சித்ராமனோகரன் பள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரதாப் ஒன்றிய கழக உறுப்பினர்கள் சரஸ்வதி, பார்த்திபன், மோகன், அருள்தாஸ் ,சரவணன் அப்துல்நாசிர், சம்பந்தன், சேகர் , லட்சுமிபதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.