மண்ணை மாரிமுத்து,நிருபர்,மண்ணச்சநல்லூர்
திருச்சி விடியல் பயண பேருந்து துவக்கி வைத்த அமைச்சர் மகேஷ்…
மகளிர் விடியல் பயண புதிய பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகரப் பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருச்சிராப்பள்ளி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் (லிமிடெட்) திருச்சிராப்பள்ளி மண்டலத்தின் சார்பில் ஒரு மகளிர் விடியல் பயண புதிய பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகரப் பேருந்துகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் மதிவாணன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா, திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் சதீஷ்குமார் அவர்கள், துணை மேலாளர்கள் சாமிநாதன், ரவி, போக்குவரத்து கழக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.