திருவொற்றியூர், அப்பர் சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 40, அதே பகுதியில், காஸ் ஸ்டவ் ரிப்பேர் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, வேலையை முடித்து, கடையை மூடிச் சென்றுள்ளார்.
அதிகாலை, 2:00 மணிக்கு, கடையில் இருந்து கரும்புகை வெளியேறுவதாக, கட்டட உரிமையார் பவானி, கடையின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த, திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப் பினும், கடை முழுவதும் தீக்கிரையானது.
இதில், காஸ் ஸ்டவ் ரிப்பேருக்காக வாங்கி வைத்திருந்த, புதிய உபகரணங்கள் உட்பட, பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து, நாசமாயின. சம்பவம் குறித்து, திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.