தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா செல்லாங் காலனி பகுதிகளில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்லம் கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்கு வீடு கட்டும் ஆணை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜ. பெரியசாமி தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியகுளம் கே எஸ் சரவணக்குமார் ஆண்டிபட்டி ஆ. மகாராஜன் கம்பம் என் ராமகிருஷ்ணன் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் உள்பட பலர் உடன் இருந்தனர்