தாராபுரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்-மாதாந்திர சம்பளம் வழங்காததை கண்டித்து 180 பேரும் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் தூய்மை பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்கள், கடந்த சில மாதங்களாக தங்களின் மாத சம்பளம் வழங்கப்படாததை எதிர்த்து (17-ம் தேதி) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதில் 160 பெண்கள் மற்றும் 20 ஆண்கள் கலந்து கொண்டனர். நகரின் முக்கிய பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்க, இதனை அகற்றும் பணியை மேற்கொள்ளாமல் அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். “எங்களது உழைப்பிற்கு உரிய மாத சம்பளத்தை வழங்க வேண்டும்” என கோஷங்கள் எழுப்பி, நகராட்சி நிர்வாகத்திடம் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

மேலும் தங்களுக்கு தினக்கூலியாக ரூபாய் 4 70 வழங்கி வருவதாகவும் அதில் 20 ரூபாய் நபர் ஒருவருக்கு ஒப்பந்ததாரர் சென்னை.ஆருத்ரா கார்ப்பரேட் நிறுவனத்தின் மேலாளர் தினேஷ் குமார் எடுத்துக் கொள்வதாகவும். மேலும் மேலும் பி.எப். கட்டணமாக மாதம் 50 பிடித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

எனவேதற்போது நகராட்சி நிர்வாகம், சம்பள விஷயத்தில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி ஆணையாளர் முஸ்தபாவிடம் தெரிவித்துள்ளனர்.

. சம்பள பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படாமல் இருந்தால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றும் பணி திரும்ப கூடாது என்றும் பணியாளர்கள் உறுதிப்பட தெரிவித்தனர் இதனால் நகராட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் முஸ்தபா தூய்மை பணியாளர்களிடம் வேலைக்கு செல்லுமாறு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *