அந்தியூர் வட்டார அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், இரண்டு மாதங்கள் முதல் ஐந்து வயது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கு தடுப்பு குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு முகாம், கருவல்வாடிப்புதுார் சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
அந்தியூர் வட்டாரத்திலுள்ள 140 அங்கன்வாடி மையங்கள், 25 அரசு துணை சுகாதார நிலையங்கள், ஐந்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், 17 முதல் வரும் 31ம் தேதி வரை விழிப்புணர்வு முகாம் நடக்கிறது.
இதில், உப்பு கரைசலை குழந்தைகளுக்கு கொடுக்கும் முறை மற்றும் பாதுகாப்பு முறை குறித்து ஆலோசனையும் அறிவுரையும் வழங்கப்பட்டது.
அத்தாணி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4,575, சின்னத்தம்பிபாளையத்தில், 2173, எண்ணமங்கலம் 2240, பர்கூர் 970, ஒசூர் 890, என, மொத்தம் 10, 848 குழந்தைகள் பயன் பெறுவர் என, மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தெரிவித்தார்.