தேனி மாவட்டத்தில் உணவு வணிகர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தவறாது பின்பற்றிட வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளது பதிவு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைப்பாய்டு மற்றும் மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி மருத்துவ தகுதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து பகுப்பாய்வு அறிக்கை வைத்திருத்தல் உணவுப் பொருட்களை ஈக்கள் பூச்சிகள் மொய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து காட்சிப்படுத்துதல் உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட பார்ச்மென்ட் பேப்பர் அலுமினியம்/ பாயில் மட்டுமே பயன்படுத்துதல் உணவு மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்துதல் வேண்டும் உணவகங்களில் விற்பனையாகாத மீதமான உணவுகளை உடனடியாக அப்புறப்படுத்திடல் வேண்டும்
உணவை சப்ளை செய்யும் சப்ளையர்கள் கையுறை மற்றும் தலை முடி கவசம் அணிதல் பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களை கொள்முதல்/ விற்பனை செய்யும் போது FSSAI உரிய எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விபரங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் உணவு எண்ணெயை ஒரு முறை மட்டும் சமைக்கப் பயன்படுத்த வேண்டும் பயன்படுத்திய உணவு எண்ணெயை FSSAI அங்கீகரித்த கொள்முதலாளுருக்கு மட்டும் விற்பனை செய்தல் வேண்டும்
எவ்வகை உணவு எண்ணைக்கையும் லேபிள் விபரங்களின்றியும் ஒற்றை விடாமல் சில்லறை அடிப்படையிலும் நுகர்வோருக்கு விற்பனை செய்யக் கூடாது அனுமதிக்கப்படாத நெகிழியில் பிளாஸ்டிக் மற்றும் நியூஸ் பேப்பர் போன்ற அச்சிடப்பட்ட காகிதங்களில் உணவுப் பொருட்களை நேரடியாகப்படும் வகையில் பரிமாறாவோ பொட்டலமிடப்படவோ கூடாது உணவு பொருட்களில் சேர்க்கை நிறமிகள் சேர்க்கக்கூடாது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது உணவு வணிகர்கள் அனைவரும் மேற்கூறியவற்றை தவறாது பின்பற்ற வேண்டும் தவறும் பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்பு இன்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் பொதுமக்கள் உணவு பாதுகாப்பு குறித்தான புகார்களுக்கு 94440 42322 மற்றும் மாநில whatsapp புகார் எண் அல்லது04546 252549 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது TN Food saftey consumer App செயலி மூலமாகவோ புகார் அளிக்கலாம்
.http.://foodsaftey.tn.gov.in. அல்லது https://foscos.fssai.gov.in என்ற இணைய தளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம் மேலும் தேனி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் என்று போலியான நபர்கள் தொடர்பு கொண்டாலோ அல்லது நேரடியாக வந்தலோ மாவட்ட காவல் துறை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்
தற்போதைய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விபரங்கள் தேனி அல்லிநகரம் அகரம் மற்றும் தாலுக்கா குறியீடு எண் 473 ஹெச். லிங்கம் செல் நம்பர் 99446
74560 ஆண்டிபட்டி தாலுக்கா மற்றும் கடமலை மயிலை தாலுக்கா குறியீடு எண் 225. செல் நம்பர் 90033.16144.டி. இளங்கோவன் போடிநாயக்கனூர் நகரம் மற்றும் தாலுக்கா குறியீடு எண் .468 செல் நம்பர் 9003735560.ஜி. செந்தில்குமார் சின்னமனூர் நகரம் மற்றும் தாலுகா குறியீடு எண் .469 செல் நம்பர் 99422.38465. கே சிரஞ்சீவி உத்தமபாளையம் நகரம் மற்றும் தாலுகா குறியீடு எண் 232 மற்றும் கூடுதல் பொறுப்பு கம்பம் நகராட்சி ஒன்றியம் மற்றும் கூடலூர் நகராட்சி செல் நம்பர் 98654.29827. எம். ரமேஷ் பெரியகுளம் நகரம் மற்றும் தாலுகா குறியீடு எண் 472 செல் நம்பர் 8508888700 எஸ்.கண்ணன் மேற்கண்ட செல் நம்பர்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.