கந்தர்வ கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கல்வியாளர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் அமுதா முன்னிலை வகித்தார்.
கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழுவின் கருத்தாளர் முருகதாஸ் பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் குறித்தும், பள்ளியின் உள்கட்டமைப்பு மாணவர் சேர்க்கை, முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு, உள்ளாட்சி நிர்வாகத்தின் பங்கு உள்ளிட்டவை குறித்து கருத்துரை வழங்கினார்.
அறிவியல் ஆசிரியர் ரகமத்துல்லா அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் திட்டங்களான காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், வானவில் மன்றம், மணற்கேணி என் எம் எம் எஸ் தேர்வு உள்ளிட்டவை குறித்து பேசினார். இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள் மணிமேகலை நிவின் செல்விஜாய் ஜெம்ம ராகினி சகாய ஹில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.