தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அருகே உள்ள மணக்கடவில் தாராபுரம் பழனி ரோட்டை கடந்து புள்ளிமான் ஒன்று ஓடியுள்ளது.அதனை அப்பகுதி மக்கள் சிலர் தங்ரகள் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து உள்ளனர்.
பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சுற்றித்திரியும் இந்த புள்ளிமான் ஊதியூர் காட்டுப்பகுதியில் இருந்து வழிதவறி வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.இந்த மான் சுமார் 5 அடி உயரத்தில்,100 கிலோவுக்கு மேல் எடை கொண்டதாக காணப்படுகின்றது.
அது சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு பலியாக வாய்ப்பு உள்ளது. மேலும் சமூக விரோதிகள் அதனை வேட்டையாடவும் முற்படுவர்.எனவே அந்த புள்ளிமானை விரைவில் பிடித்து ஊதியூர் காட்டுப்பகுதியில் கொண்டுவிட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.