வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் ஒன்றிய, மாநில அரசின் நிதியின் மூலம் 51 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி வீடு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளுக்கு பிரதம மந்திரி வீடு குடியிருப்பு திட்டத்தின் கீழ் 51 வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணியினை வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சிவகுமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.