துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை (20 -06- 2025) இன்று சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து கல்லூரி வளாகத்தை பார்வையிட்டு சேர்க்கை அனுமதியை மாணாக்கர்களுக்கு வழங்கினார்.
இந்தக் கல்லூரி 2025 – 26 ஆண்டுக்கான மொத்தம் 270 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் கல்லூரியில் இந்த ஆண்டு ஐந்து பாட பிரிவுகள் நடைபெற இருப்பதாகவும் கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் ந.தியாகராஜன்(முசிறி), செ.ஸ்டாலின்குமார் (துறையூர்),சீ.கதிரவன்(மண்ணச்சநல்லூர்),கல்லூரி கல்வி இணை இயக்குநர் பீ.பொன்முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, கல்லூரி முதல்வர் டாக்டர் அருணாசலம் பேராசிரியர்கள் ராஜதுரை, ஹேமலதா, சுதாகர், சுகிர்தா, டேவிட், ரமேஷ், கண்காணிப்பாளர் பானுமதி, ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் சாந்தஷீலா, கவிதா, மெரினா, சிலம்பரசன் மற்றும் நகரத் தலைவர் செல்வராணி, துணைத் தலைவர் முரளி, நகராட்சி ஆணையர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் இளையராஜா, வீர மணிகண்டன், அம்மன் பாபு,சுமதி மதியழகன், கார்த்திகேயன்,ஒன்றிய செயலாளர்கள் வீரபத்திரன்,சிவசரவணன், அண்ணாதுரை, முத்துச்செல்வன், அசோகன், பேரூர் வெள்ளையன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன் தாஸ், இலக்கிய பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம்,நகர துணை செயலாளர்கள் இளங்கோவன்,பிரபு, பொதுக்குழு கிட்டப்பா, செங்கை செல்லமுத்து, வழக்கறிஞர் அணி நரேஷ் குமார், மாவட்ட பிரதிநிதி மதியழகன், டைலர் சீனி, ரெங்கநாதபுரம் கார்த்திக், அரசு வழக்கறிஞர் ஜெயராஜ், வழக்கறிஞர்கள் யோகராஜ், முகமது ரபீக், தமிழ்செல்வன்,சரண்ராஜ்,18 வது வார்டு மோகன், சசிகுமார், நல்லுசாமி, தர்ஷினி திருமூர்த்தி , இளைஞர் அணி கீரம்பூர் முத்து துரை, தமிழ் அழகன், மெடிக்கல் பிரேம்,ஸ்டுடியோ சசிகுமார், பிரபு தங்கவேல் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் நிகழ்ச்சிகளை பிஆர்ஓ பாலசுப்ரமணியன், ஏபிஆர்ஓ சுதாகர் தொகுத்து வழங்கினர்.
விழாவிற்கு இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் உதவி காவல் ஆய்வாளர்கள் தமிழ்ச்செல்வன்,சஞ்சீவி, வடிவேலு மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்துல்லா உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்