கோவை புதூர் வித்யாஸ்ரம் பள்ளி மழலை குழந்தைகள் கொண்டாடிய பசுமை தின விழா
ஆரோக்கிய வாழ்வுக்கு மரங்கள் அவசியம் என்பதை வலியுறுத்தும் விதமாக மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர்வு
கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தின விழா நடைபெற்றது இதில் போதை பழக்கமில்லாமல் வாழ்வது,யோகா கலையை தினமும் செய்வது,குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இதில்,மூன்றாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு பல்வேறு ஆசனங்களை செய்தனர்..
இந்த நிகழ்ச்சிக்கு அருகில் இருந்த வித்யாஸ்ரம் மழலை பள்ளியில் பயிலும் மழலை குழந்தைகள் வந்திருந்தனர் கையில் மரக்கன்றுகளை ஏந்தியபடி வந்த மழலை குழந்தைகள் உலக யோகா தினத்தில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி அசத்தினர்..
இது குறித்து பள்ளி நிர்வாக இயக்குனர் சவுந்தர்யா கூறுகையில் உலக பசுமை தினத்தை முன்னிட்டு இவ்வாறு செய்ததாகவும், யோகா செய்வதுடன் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களும் அவசியம் என்பதை அனைவருக்கும் வலியுறுத்தும் விதமாக மரக்கன்றுகளை மழலை குழந்தைகள் கைகளால் வழங்கியதாக தெரிவித்தார்…