கோவை
திமுக தேர்தல் வாக்குறுதிகள் தெரிவித்தது போல கிறிஸ்துவ மத போதகர்களுக்கான நல வாரியத்தை அமைக்காமல் காலதாமதம் செய்து வருவதாக எழும்பி பிரகாசி மிஷினரி பேராய நிறுவன தலைவர் பேராயர் ஜெய்சிங் கோவையில் தெரிவித்துள்ளார்.
கோவை ஆடிஸ் வீதி பகுதியில் உள்ள பத்திரிக்கையாளர்கள் மன்றத்தில் எழும்பி பிரகாசி மிஷினரி பேராய எனும் கிறிஸ்துவ அமைப்பின் நிறுவன தலைவர் பேராயர் ஜெய் சிங் உள்ளிட்ட மத போதகர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு கிறிஸ்தவ திருச்சபைகளின் கீழ் 8 லட்சத்திற்கும் அதிகமான மத போதகர்கள் சமயப் பணி ஆற்றி வருவதாகவும், சிறுபான்மை மக்களின் காவலர்கள் என கூறிக்கொள்ளும் திமுக கடந்த தேர்தல் அறிக்கையில் மத போதகர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தனர்.
ஆனால் நான்கு ஆண்டுகள் ஆகியும் அதனை நிறைவேற்றவில்லை எனவும் விரைவில் முதல்வரை சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்க இருப்பதாகவும் தேர்தல் நெருங்கும் வேளையில் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பாக வலியுறுத்த இருப்பதாக தெரிவித்தனர்.
பேட்டி – ஜெய்சிங்,
பேராயர்