விஞ்ஞானப் போட்டியான “மறுமலர்ச்சி சர்வேத அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் பிரதான பரிசு நீதிபதியாக பொறுப்பாற்றிய திருச்சி ஸ்ரீசீனிவாஸ்
துறையூர்
சமுதாய முன்னேற்றத்தில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் ஸ்ரீனிவாஸ் ஏ.பி./திருச்சியைச் சேர்ந்தவர். செயற்கை நுண்ணறிவு/ இயந்திர கற்றல் பற்றிய ஆழ்ந்த ஆர்வத்துடன், உலகளாவிய மாணவர்களுக்கான விஞ்ஞானப் போட்டியான “மறுமலர்ச்சி சர்வேத அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியில் இந்த வருடம் பிரதான பரிசு நீதிபதியாக பொறுப்பாற்றினார்.
இந்த ஆண்டு ஒஹாயோ மாநிலம், கோலம்பஸில் நடைபெற்ற “மறுமலர்ச்சி சர்வேத அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சியின் 75ஆம் ஆண்டு விழாவில் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த ஆயிரத்து அறுநூறு மாணவர்களை ஒருங்கிணைத்து ஒன்பது மில்லியன் டாலருக்கு மேற்பட்ட ஸ்காலர்ஷிப் மற்றும் விருதுகள் வழங்கப்பட்ட நிகழ்வில் ஒரு பிரதான நீதிபதியாக செயல்பட்டார். தன்னுடைய 8 வருட அனுபவத்துடன், இணையப்பயன்பாடுகளுக்கான மேம்பட்ட பயனர் இடைமுகம் மற்றும் பயனர் அனுபவம் போன்ற கட்டமைப்புகளில் தனது ஆழ்ந்த வல்லுநத்தையும் செயற்கை நுண்ணுறிவு/இயந்திர கற்றல் துறையில் தொடர் ஆர்வத்தைக் கொண்டு மாணவர்களின் திட்டங்களை மதிப்பீடு செய்தார். ஸ்ரீனிவாஸ் அருணாச்சலம் பாலசுப்ரமணியன் “மறுமலர்ச்சி சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்காட்சி 2025”- ன் பங்கேற்பை, புதிய தலைமுறையை ஊக்குவிக்கும் ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டார். இது தொழில் நுட்பத்துறையை முன்னேற்றுவதற்கான அவரது அர்ப்பணிப்பை வெளிப்படுத்துக்கிறது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்