கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சி பட்டியில் வாசிப்பு இயக்கத்தின் சார்பில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் போட்டிகள் நடத்தப்படுகிறது. கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி , பேச்சுப்போட்டி தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இந்த வாரத்திற்கான தலைப்பு ஆறு ஏழு எட்டு வகுப்பு மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு, ஓசோன் படலம், காயிதே மில்லத் தொண்டுள்ளம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். ஆங்கில ஆசிரியர் சிந்தியா அனைவரையும் வரவேற்றார்.
அறிவியல் ஆசிரியர் ரகமதுல்லா ஒருங்கிணைத்தார். உணவு பாதுகாப்பு என்ற தலைப்பில் பேசிய மாணவர்கள் குறிப்பாகஉணவுப் பாதுகாப்பு என்பது எல்லா நேரங்களிலும் பாதுகாப்பான, சத்தான மற்றும் போதுமான உணவை அணுகும் திறனைக் குறிக்கிறது. இதன் பொருள் ஆரோக்கியமான வாழ்க்கையை அடைய நன்கு சீரான உணவுக்காக ஏராளமான உணவு ஆதாரங்களை அணுகுவதாகும்.
உணவுப் பாதுகாப்பு சிறந்த ஆரோக்கிய விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. நல்ல உணவு உடலை வலுப்படுத்துகிறது, ஆற்றலை தருகிறது. மற்றும் போதுமான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது – ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் கணிசமாக பங்களிக்கிறது.
ஓசோன் படலம் பாதுகாப்பு குறித்தும் காய்தே மில்லத் தொண்டுள்ளம் குறித்தும் மாணவர்கள் சிறப்பாக பேசினார்கள்.. நிறைவாக கணித ஆசிரியர் மணிமேகலை நன்றி கூறினார்