திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் “ஏர் ஹார்ன் பயன்படுத்திய அரசு, தனியார் பேருந்துகளுக்கு ரூ.12,000 அபராதம் – ஆர்.டி.ஓ. அதிரடி”
திருப்பூர் மாவட்டம் – தாராபுரம் பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனையில் ஆர்.டி.ஓ அதிகாரிகள், அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன் பொருத்திய பேருந்துகளுக்கு ரூ.12,000 வரை அபராதம் விதித்துள்ளனர்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹார்ன்கள் பல மாதங்களாக பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தன. சாலையில் பயணிக்கும் போது திடீரென அதிக ஒலி எழுப்பும் இந்த ஹார்ன்கள், மற்ற வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும், விபத்து அபாயத்தையும் ஏற்படுத்தி வந்தது.
இந்நிலையில், இன்று தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் பழனியப்பன், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணக்குமார், கண்காணிப்பாளர் அமிர்தராஜ் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.
பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஹார்ன்களின் ஒலி அளவை, டெசிபல் அளவுகோல் மூலம் பரிசோதனை செய்த அதிகாரிகள், 90 டெசிபலைத் தாண்டி ஒலி எழுப்பும் ஹார்ன்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
சோதனையின் போது, நான்கு தனியார் பேருந்துகளும், இரண்டு அரசு பேருந்துகளும் — மொத்தம் 13 பைப் ஹார்ன்கள் அகற்றப்பட்டன. இதற்காக தலா ரூ.2000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“போக்குவரத்து விதி மீறி மீண்டும் இந்த வகை ஹார்ன்கள் பொருத்தப்பட்டால், ரூ.3000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும்,” என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து ஏர் ஹார்ன் பற்றிய பொதுமக்கள் புகார்களின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என எதிலும் பாரபட்சமின்றி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து.தாராபுரம் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கமலவாணி. உடன் ஆய்வு மேற்கொண்டு பேருந்து ஓட்டுனர் நடத்தினர் மற்றும் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.