தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் வருகிற 12/7/2025 அன்று குரூப்4 தேர்வினை நடத்துகிறது.இந்த தேர்வு 10 ம்வகுப்பு தேர்ச்சியை அடிப்படையாக கொண்ட தேர்வு என்பதால் 20 லட்சம் பேர் எழுத வாய்ப்பு உண்டு! போட்டி மிக கடுமையாக இருக்கும் என தெரிகிறது.இந்த தேர்வுக்கு முன்னோட்டமாக ஆயக்குடி மரத்தடி மையம் 6/7/2025 அன்று மாதிரித்தேர்வினை நடத்துகிறது.
இந்த தேர்வில் முதலிடம் பெறும் முதல் மூன்று பேருக்கு முதல்பரிசாக ரூ.5000, இரண்டாம்பரிசாக ரூ.3000, மூன்றாம்பரிசாக ரூ.2000 என பரிசுகள் வழங்க படவுள்ளது.இந்த மாதிரித்தேர்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம்.போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ,மாணவிகளை ஊக்க படுத்தும் விதமாக இந்த பரிசுகள்வழங்க படுவுள்ளது.
இந்த மாதிரித்தேர்வில்100 தமிழ்வினாக்களும்,75 பொது அறிவு வினாக்களும்25 திறனறிவு வினாக்களும் கேட்கபடும்.காலை 10 முதல்1 மணி வரை தேர்வு ஆயக்குடி மரத்தடி மையத்தில் நேரடித்தேர்வாகவே தேர்வு நடைபெறும்.முன்பதிவு செய்து கொள்ள 9486301705 என்ற எண்ணில்தொடர்பு கொள்ளலாம்.