திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழா கொண்டாடப்பட்டது.இதற்கு முதல்வர் ஜெயரட்சக ராஜராஜன் தலைமை தாங்கினார்.ஆசிரியர் ஜான்சன் வரவேற்புரையாற்றினார்.
இதில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.இதில் மதுக்கூர் ராமலிங்கம்,அமைதி அறக்கட்டளை இயக்குனர் ரூபபாலன்,வைகை அறக்கட்டளை இயக்குனர் அண்ணாதுரை,கலாம் அறக்கட்டளை நிறுவனர் மருதை கலாம்,நலம் அறக்கட்டளை நிறுவனர் முருகேசன்,மாமன்ற உறுப்பினர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்