தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் 51 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது அதன் அடிப்படையில் தூத்துக்குடியில் கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது
முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் ஏற்பாட்டில் தூத்துக்குடி மாநகர விஜய் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக அழகேச புறத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகம் டாக்டர் தளபதி விஜய் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
அந்த விழாவில் 251 பேர் ரத்த தானம் செய்தனர் 51 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர் மேலும் 51 அடி நீளமுள்ள கேக் வெட்டப்பட்டது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 51-வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 51 அடி நீளம் உள்ள கேக் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமையில் எஸ் டி ஆர் சாம்ராஜ் கிஷோர் ராம்ஸ் அன்பரசு ஆகியோர் 51 அடி நீளமுள்ள கேக் வெட்டப்பட்டு பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டது
அதனை அடுத்து 51 வயது விஜய் குறிக்கும் வகையில் 51 பேர் உடல் உறுப்பு தானம் செய்தனர் அதன் பின்பு 251 பேர் ரத்த தானம் செய்தனர் இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் ஏற்பாட்டில் தூத்துக்குடி மாநகரில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகர் விஜய் 51 வது பிறந்தநாளை தூத்துக்குடியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் எல்லாம் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் கோல்டன் மற்றும் அண்டோ. டேனியல் ராஜ். மணிகண்டன்.. ராஜா. சந்தன ராஜ். சுதன் உள்ளிட்ட தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு தூத்துக்குடி மாநகர பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பிறந்தநாள் பரபரப்பாகவும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவும் நடைபெற்றது அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த நடிகர் விஜய் 51 வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது பல்வேறு அரசியல் கட்சி பரபரப்பாக உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது