திண்டுக்கல் ஸ்டார் கிட்ஸ் மருத்துவமனையில் யோகா தின விழா
திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள ஸ்டார் கிட்ஸ் குழந்தைகள் நல மருத்துவமனையில் 11 வது உலக யோகாசன தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி முகாம் நடைபெற்றது.
யோகா பயிற்றுனர் சாவித்திரி பாபு பயிற்சி அளித்தார். இதில் காஸ் மாஸ் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் , மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள், குழந்தைகள், பெற்றோர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்களுக்கு மூச்சு பயிற்சி, வலி நிவாரண பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை ஸ்டார்கிட்ஸ் மருத்துவமனை நிறுவனர் திபூர்சியஸ், நிர்வாக இயக்குனர் டாக்டர். ஆன்டனி லியோ ஜெர்ரி, இயக்குனர் டாக்டர்.ஷிஜி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.