தென்குவளவேலி அரசு பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னதாக போதைப் பொருள் விழிப்புணர்வு தினத்தையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மேலும் போதை இல்லாத நாட்டை உருவாக்க வேண்டும் என்பதை மையப் பொருளாக கொண்டு மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அ. வெற்றி வேலன் தலைமை தாங்கினார்.
போதைப் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதன் அவசியம் குறித்து மாணவர்கள் உரை நிகழ்த்தினர்கள். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் ஆசியர்கள் சூரியகுமார், ராமமூர்த்தி, இளையராஜா, விஜயகுமாரி, ரேணுகா ஆகியோர் பரிசுகள் வழங்கினார்கள்.