கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற விழாவில், 15 பெண் நிர்வாகிகள் உடல் உறுப்பு தானம் செய்தனர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்வதற்கு தேவையான ஊதுவத்தி,இனிப்பு மிட்டாய்கள்,பேனா உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் இன்று ஜூன் 22 ந்தேதி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்நிலையில்,தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை புறநகர் கிழக்கு மாவட்டத்தின் செயலாளர் பாபு தலைமையில்,தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..
இதன் தொடர்ச்சியாக, கோவை அரசு மருத்துவமனைக்கு வந்த த.வெ.க. பெண் நிர்வாகிகள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர் 15 நிர்வாகிகள் உடல் உறுப்பு தானம் செய்துள்ள நிலையில் இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளது நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
தங்களது மறைவுக்கு பின்னர் தங்களது அனைத்து உடல் உறுப்புகள் பிறர் உயிர் வாழ பயன்படும் வகையில் உடல் உறுப்புகளை தானமாக வழங்கி உள்ளதாக தெரிவித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்..
முன்னதாக அரசு மருத்துவமனைக்கு வந்த பொதுமக்களுக்கு த.வெ.க.தலைவர் விஜய் படம் பொறித்த கடலை மிட்டாய்களை கட்சியினர் வழங்கினர் தொடர்ந்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று அவர்கள் சுயதொழில் செய்வதற்கு தேவையான ஊதுவத்தி,இனிப்பு மிட்டாய்கள்,பேனா உள்ளிட்ட பொருட்கள் தௌபீக் ஏற்பாட்டில் வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில்,மோகனப்பிரியா, பவித்ரா,கௌசல்யா அவிலாகிரேசி, கோமதி, ரேஸ்மா பிரியாராணி,லட்சுமி முனியம்மா, ஐஸ்வர்யா ,உஷா ரஞ்சிதா,புஷ்பா செல்பியா,வசந்தி சாந்தி, சபரீஷ்,ராஜா, சரவணன் செந்தில்குமார், வினோத்குமார், சதீஷ்குமார்,தௌபீக்,மந்திரகுமார்,கார்த்தி,ராகுல்,சஞ்சய் உட்பட பலர் கலந்து கொண்டனர்..