துறையூர் ரோட்டரி சங்கம்-புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் ரோட்டரி சங்கம் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது.துறையூரில் உள்ள ஸ்ரீபாக்யலட்சுமி மஹாலில் துறையூர் ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா 21-06-2025 அன்று நடைபெற்றது.
இதில் 2025 – 26 ஆம் ஆண்டின் துறையூர் ரோட்டரி சங்கத்தின் புதிய தலைவர் இ.ஆனந்த், செயலாளர் எஸ்கேபி இரா.பாஸ்கர், பொருளாளர் வே.இளங்கோவன் ஆகியோர் பணியேற்பு கொண்டனர். இதில் மாவட்ட ஆளுநர் ஆர்.சுப்பிரமணி புதிய நிர்வாகிகளை பணியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜி.பாபு மற்றும் கண்ணனூர் இமயம் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஏ.ஆண்டி நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்கள். இந்நிகழ்வில் தங்கமயில் ஜுவல்லர்ஸ் லிமிடெட் முதன்மை அலுவலர் விஸ்வ நாராயணன் சிறப்புரை ஆற்றினார்.
மாவட்டத் துணை ஆளுநர் ஆர்.ராமகிருஷ்ணன் புதிய உறுப்பினர்களை துறையூர் ரோட்டரி சங்கத்தில் இணைத்து வாழ்த்தி உரையாற்றினார். மேலும் இவ்விழாவில் 2025 – 26 நிர்வாக குழு நிர்வாகிகள் மற்றும் சங்க இயக்குனர்கள், திட்ட இயக்குனர்கள், திட்ட செயலாக்க குழுவினர், துறையூர் சங்க சிறப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், கனவு ஆண்டு மாவட்ட சிறப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், குடும்பத்தினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்