மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு-துறையூரில் இருந்து வேல் எடுத்துச்சென்ற பாஜகவினர்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு ஜூன் 21ஆம் தேதி துறையூர் பாஜகவினர் முருகவேல் எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறியாளர் தனபால் முன்னிலையில் திருச்சி வடக்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் அஞ்சா நெஞ்சன் தலைமையில் மதுரையில் இந்து முன்னணி சார்பில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு “முருகவேல்” எடுத்துச் செல்லும் நிகழ்வு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கோலாச்சும் ஸ்ரீமுருகன் ஆலயத்தில் முருகவேலுக்கு சிறப்பு பூஜை செய்து “முருகவேளை” ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கு எடுத்துச் சென்றனர். நிகழ்வில் மாநில செயற்குழு உறுப்பினர் மனோகர்ராஜன், நகர தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்