மயிலாடுதுறை செய்தியாளர் இரா.மோகன்
அரசு வேலை வாங்கித்தருவாதாக கூறி 11 லட்சம் மோசடிசெய்த நபர் மீது நடவடிக்கை எடுத்து தங்கள் பணத்தை பெற்று தர கோரி பாதிக்கப்பட்ட பெண்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் புகார்:-
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 11 லட்சம் மோசடி செய்து பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஏழு பெண்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர் கூட்டத்தில் தனித்தனியாக மனு அளித்து தங்கள் பணத்தை மீட்டு தரும்படி கோரிக்கை விடுத்தனர்.
முளப்பாக்கம் சசிகலா, சுசிலா, விஜயலட்சுமி, எழிலரசி, தேரழந்தூர் வெற்றிச்செல்வி, சேத்தூர் மஞ்சுளா, பனம்பள்ளி ஜெயந்தி ஆகியோர் அளித்த மனுவில் தங்களிடம் சத்துணவு அமைப்பாளர், உதவியாளர், அரசு அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் வேலை மற்றும் வீட்டுமனை பட்டா வாங்கித்தருவதாக எங்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக திருவாளப்புத்தூர் நடுத்திட்டு கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் எழுபேரிடமும் மொத்தம் 11 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வாங்கித்தராமல் ஒரு வருடத்திற்கு மேலாக ஏமாற்றி வருகிறார்.
இது குறித்து உரிய விசாரணை செய்து தங்கள் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதில் கேட்டுக்கொண்டுள்ளனர்.