தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கம், தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் ஆகிய இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம் வள்ளலார் தொடக்கப் பள்ளியில் ச ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
முகாமை கும்பகோணம் வள்ளலார் லயன்ஸ் சங்கத்தின் சாசன தலைவர் லயன் இரவி தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில் தலைவர் , பொருளாளர், செயலாளர் முன்னாள் தலைவர்கள் மற்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொண்டு சேவை செய்தார்கள் .
அரவிந்த் கண் மருத்துவமனை சிறப்பு மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று பொது மக்களுக்கு கண்களை பரிசோதித்தனா். நகரப்புற கிராமப்புற பொது மக்கள் சேர்ந்த சேர்ந்த 524 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 162 பேர் கண் புரை கண்டறியப்பட்ட நோயாளிகள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அவா்களுக்கு உள்விழி லென்ஸ், அறுவைச் சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து உள்ளிட்டவை இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டன.
.
முகாமுக்கு நிதி உதவி அளித்து கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கும் சேவையாற்றிய அரிமாக்களுக்கும் ,ஆசிரியர்கள்,மாணவர்கள்,அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும், முகாமுக்கு நடத்த அனுமதி அளித்த கொட்டையூர் வள்ளலார் தொடக்கப் பள்ளிகுழுமத்திற்கும், நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் என சாசன தலைவர் லயன் இரவி தெரிவித்தார்