ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் கண்மாய் தடுப்புச் சுவர் எம்.பி.ஆய்வு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மரச நாயக்கனூர் ஊராட்சியில் அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் இடம் இதனைத் தொடர்ந்து கதிர்நரசிங்காபுரம் ஊராட்சியில் கிழக்கு பகுதியில் உள்ள நாகலாறு ஓடையில் மழைக்காலங்களில் விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்து விவசாய நிலங்களில் நீர் தேங்குவதை தடுக்கும் விதமாகவும் கண்மாய்க்கு மழைநீர் தடையின்றி தேங்கி நீர் வரத்து ஏற்படவும் ஒடைப் பகுதியில் தடுப்புச் சுவர் அமைப்பது குறித்தும் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்
இதையடுத்து மொட்டனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட ரோசனம்பட்டி கிராமத்தில் கிராம மக்களுடன் கிராமத்திற்கு வேண்டிய அத்தியாவசிய தேவைகள் குறித்து கேட்டறிந்தார் அப்போது கிராம மக்கள் தங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் சாலை வசதி எங்கள் பள்ளி குழந்தைகள் நகர பகுதிகளில் சென்று கல்வி பயில குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வசதி ஏற்படுத்திதர வேண்டும் என்று கூறினார்கள்
இதனை கனிவுடன் கேட்ட எம்பி அவர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விரைவில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கிராம மக்களுக்கு உறுதியளித்தார் இந்த ஆய்வின் போது ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்