அரியலூர் நிருபர் கேவி முகமது
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இருசக்கர வாகன மக்கள் சந்திப்பு இயக்கம் நடந்தது அப்போது வாண்டராயன் கட்டளை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்து 65 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது
ஆனால் அந்த பயனாளிகளுக்கு இதனால் வரை வீட்டுமனை வழங்கப்படவில்லை இவர்களுக்கு வீட்டுமனை உடனே வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் துரைசாமியிடம்கோரிக்கை மனு கொடுத்தனர்
கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட துரைசாமி உரிய அதிகாரிகளை உடனே சந்தித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் இதில் செயற்குழு உறுப்பினர் எல்ஐசி கிருஷ்ணன் ஒன்றிய செயலாளர் சாமிதுரை இயேசுதாஸ் கிளை செயலாளர் சிவா மற்றும் கட்சி நிர்வாகிகள் அப்போது உடன் இருந்தனர்