செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகரப்பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் மதுராந்தகம் அனைத்து வணிகர்கள் பொது நலச்சங்கம் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான உணவு பாதுகாப்பு உரிமம்,பதிவு சான்று பெறுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி முகாம் சங்க தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.


இதில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு
மதுராந்தகம் உணவு பாதுகாப்பு அலுவலர் சுஸ்மிதா மற்றும் வணிகர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் வணிகர்கள் மத்தியில் சங்க தலைவர் கூறியதாவது அனைத்து வணிகர்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

மேலும் உணவு தயாரிக்குமிடமான சமையலறையை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டியது நமது கடமையாகும். இதை முறையாக கடைபிடித்தாலே நமக்கும் பாதிபிரச்னைகள் வராது என்றார்.

பின்னர் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பேசுகையில் அரசினால் தடை செய்யப்பட்ட பொருட்களை வணிகர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யக்கூடாது. இவ்வாறான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். என வணிகர்களிடையே பேசினார் இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வணிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *